எதிர்க்கட்சி தலைவராகும் ராகுல் காந்தி..?

77பார்த்தது
எதிர்க்கட்சி தலைவராகும் ராகுல் காந்தி..?
மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியமைக்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்தாண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் பெற்றுள்ளது. 18வது மக்களவை தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி