2024 மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு தனிப்பெரும்பானமை கிடைக்காததால், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் முக்கிய அமைச்சர் பதவிகளை குறிவைத்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சி மக்களவை சபாநாயகர் மற்றும் 2 மத்திய அமைச்சர் பதவியை கேட்டுப் பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், பீகாரில் 12 எம்.பி.க்களை வென்றுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார், விவசாயத்துறை, ரயில்வே அல்லது தொழில்துறை போன்ற முக்கிய இலாக்காக்களை குறிவைப்பதாக கூறப்படுகிறது. அதே போல், 4 மத்திய இணையமைச்சர் பதவியை எதிர்ப்பார்த்து காத்துள்ளார் நிதிஷ்.