தடையை மீறி 'சம்பல்' செல்லும் ராகுல் காந்தி

70பார்த்தது
தடையை மீறி 'சம்பல்' செல்லும் ராகுல் காந்தி
உ.பி: சம்பல் மாவட்டத்தில் டிச.10 வரை வெளி ஆட்கள் நுழைய தடை உள்ள நிலையில், அதை மீறி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை (டிச.04) சம்பல் சென்று கலவரத்தால் பாதித்தவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மொராதாபாத் காவல் ஆணையர் ஆஞ்சநேய குமார் சிங், "சம்பலில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கும்போதும் பதற்றம் நீடிக்கிறது. ஆகையால், ராகுல் காந்தியின் வருகையை ஒத்திவைக்க நிர்வாகம் வலியுறுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி