சையத் முஷ்டாக் அலி டிராபி அரையிறுதி போட்டியில் பரோடா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய அஜிங்கியா ரஹானே 56 பந்தில் 11 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 98 ரன்கள் குவித்தார். ரஹானே வரும் ஐபிஎல் 2025ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ.1.50 கோடிக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.