தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களை எடுத்து செல்ல கேரள அரசின் வனத்துறை அனுமதி அளித்துள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கேரள அரசின் மூலம் வல்லக்கடவு சோதனைச் சாவடி மற்றும் தேக்கடி படகு இறங்கு தளம் வழியாக முல்லை பெரியாறு அணைப்பகுதிக்குக் கட்டுமான பொருள்களை கொண்டு செல்ல அனுமதி பெறப்பட்டுள்ளது.