சப்பாத்தி மாவை பிசைந்து ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் தேவைப்படும் போது சிலர் பயன்படுத்துவார்கள். பிசைந்த மாவை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் மாவு பூஞ்சை தொற்றை உண்டாக்கும். இது உடலில் ஒரு வகையான ஒவ்வாமையை ஏற்படுத்தும். செரிமான பிரச்சனைகள், குடல் நோய்த்தொற்று, சுவை இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.