தோனியை புகழ்ந்து தள்ளிய லக்னோ அணி உரிமையாளர்

74பார்த்தது
தோனியை புகழ்ந்து தள்ளிய லக்னோ அணி உரிமையாளர்
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக இருப்பவர் மகேந்திரசிங் தோனி. ஐபிஎல் தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். தோனி குறித்து லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறுகையில், “எம்.எஸ். தோனி போன்ற கேப்டனை நான் பார்த்ததில்லை. அவருடைய சிந்தனை, அணுகுமுறை ஆகியவை வித்தியாசமானது. இன்றைய நாளிலும் அவர் விளையாடுவதை பார்ப்பது அற்புதமானது” என்றார்.

தொடர்புடைய செய்தி