கார் விபத்தில் தாய், மகன் பலி

55பார்த்தது
கார் விபத்தில் தாய், மகன் பலி
திருப்பூர்: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே கார் விபத்தில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாப்பாத்தி பள்ளம் அருகே கார் சென்றுக் கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தென்னை மரத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், ஆஷா (41) மற்றும் அவரது மகன் அனுப்ராஜா (4) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஆஷாவின் மகள் அஸ்வதி (21), மகன் அபிலேஸ்வரன் (15) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி