விராலிமலை: போதை விற்ற இருவர் கைது!

78பார்த்தது
விராலிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் கொடும்பாளூரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலிஞ்சிக்காடு பகுதியை சேர்ந்த நாகராஜன்(38) என்பவர் கொடும்பாளூர் பஸ் நிறுத்தம் அருகே புகையிலை பொருட்கள் விற்பதை பார்த்து கைது செய்தனர். இதேபோல் விராலிமலை அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல்(49) என்பவர் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றதை கண்டறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி