விராலிமலை தாலுகா வடுகப்பட்டி ஊராட்சி கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி லோகப்பிரியா (25). இவர் நேற்று விராலிமலைக்கு வந்து விட்டு மீண் டும் வீட்டுக்கு செல்வதற்காக திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே நடந்து சென்றார். அப்போது பின்தொடர்ந்து வந்த ஒரு வாலிபர் லோகப்பிரியா அணிந்திருந்த ஒன்றரை பவுன் தாலிச்செயினை பறிக்க முயன்றார். சுதாரித்த லோகப்பிரியா கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் தப்பியோட முயன்றவரை பிடித்து விராலிமலை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சுரேந்தர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.