அஞ்சல் சீட்டு வழங்குவதில் குளறுபடி அலுவலர்கள் மறியல்!

59பார்த்தது
அஞ்சல் சீட்டு வழங்குவதில் குளறுபடி அலுவலர்கள் மறியல்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முறையாக அஞ்சல் வாக்குச்சீட்டு வழங்காததைக் கண்டித்து, மாவட்டத்தின் பல பகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பயிற்சி வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தொகுதிக்கு ஓர் இடம் எனமொத்தம் 6 இடங்களில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி சனிக்கிழமை வழங்கப்பட்டது. அந்தந்தப் பகுதிகளிலுள்ள கல்வி நிலையங்களில் நடைபெற்ற இப்பயிற்சிகளில் மொத்தம் 7 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இப்பயிற்சியின்போதுதான் அவர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும், ஆங்காங்கே அஞ்சல் வாக்குகளையும் செலுத்த வேண்டும் எனவும்தேர்தல் அலுவலர்கள்
அறிவுறுத்தி இருந்தனர்.
அதன் அடிப்படையில்,
சனிக்கிழமை பயிற்சி
மையத்துக்கு
வந்திருந்தோருக்கு
வாக்குச்சீட்டு வழங்குவதில்
குளறுபடி ஏற்பட்டுள்ளது.
இதை எதிர்த்து திருமயம்
மற்றும் இலுப்பூரில் உள்ள
பயிற்சி மையங்களில்
இருந்து வாக்குச்சாவடி
அலுவலர்கள் வெளியேவந்து
சாலை மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.