முக்கண்ணாமலைப்பட்டி அருகே புலவன்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று செங்கப்பட்டி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த போது திடீரென தவறி கிணற்றில் விழுந்தது. பின்னர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி ஆட்டை உயிருடன் மீட்டனர்.