விராலிமலையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா!

76பார்த்தது
விராலிமலையில் உள்ள பிரசித்தி
பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நட்சத்திர திதி வரும் நாளில் வருடாபிஷேகம் நடத்தப்படவேண்டும். அதன்படி 3ம் ஆண்டு வருடாபிஷேகம் நடந்தது. சிவாச்சா ரியர்கள் புனித நீர் கடங்களை எடுத்து மேள தாளங்களுடன் கோயிலை வலம் வந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானைக்கு 32 வகையான திரவியங்களால் அபிஷேகங்கள் செய்தனர். இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள், உபயதாரர்கள், திரு முறை மன்றத்தினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி