கட்டாக்: இந்திய அணிகெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 69, பென் டக்கெட் 65 மற்றும் லிவிங்ஸ்டன் 41 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3, ராணா, ஷமி, பாண்ட்யா மற்றும் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.