பொன்னமராவதி அருகே உள்ள கருக்கா பூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மனோகரன், ஜெயராமன், ராஜேந்திரன் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் இவர்கள் பணி நிமித்தமாக இப்போது வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் நேற்று காலை வீட்டை சுத்தம் செய்வதற்காக வந்த போது மூன்று வீடுகளின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது கண்ட அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து வீட்டின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பெயரில் மூன்று பேரும் பொன்னமராவதி போலீசில் புகார் அளித்தனர். இதில் ராஜேந்திரன் வீட்டிலிருந்து 48 ஆயிரம் ரொக்கம் இரண்டு பவுன் தங்க நகை ஒன்றை கிலோ வெள்ளி பொருள்கள், ஜெயராமன் வீட்டில் ஒரு கிலோ வெள்ளி பொருள்கள் பத்தாயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது மனோகரன் வீட்டில் பொருட்கள் எதுவும் இல்லை இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இதேபோல் க புதுப்பட்டியில் கடந்த ஆறாம் தேதி 3 வீடுகளில் திருட்டு நடந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.