கிறிஸ்தவ மத பாடல்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான ஜான் ஜெபராஜ், சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் உள்ள கிங் ஜெனரேஷன் பிரார்த்தனை கூட போதகர் ஜான் ஜெபராஜ், தனது வீட்டில் நடந்த பார்ட்டியின்போது 2 சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.