திருமயம்: ராங்கியத்தில் பாங்க் ஆப் பரோடா வங்கியின் 117வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடந்தது. கிளை மேலாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சாந்தி முன்னிலை வகித்தார். முகாமை வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்செல் வன் தொடங்கி வைத்தார். ராங்கியம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் 150 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் வழங்கினர். உதவியாளர் கணேசன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வங்கி அலுவலர்கள் செய் திருந்தனர்.