புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் வலங்கொண்டான்விடுதி ஊராட்சி, மோளுடையான்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் புதுகை எம்எல்ஏ முத்துராஜா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை, சந்தித்து பேசினார். பின்னர் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த சத்துணவை உண்டு ஆய்வு செய்தார்.