கந்தர்வகோட்டையில் பருவமழை கால மீட்பு ஒத்திகை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு தீயணைப்பு மீட்புத் துறையின் மண்டல துணை இயக்குநர் குமார் உத்தரவின்பேரில், புதுக்கோட்டை மாவட்ட அலுவலர் சத்திய கீர்த்தி வழிகாட்டுதலின்பேரில் கந்தர்வகோட்டை நிலைய அலுவலர் சிவக்குமார் (பொ) முன்னிலையில் வரஇருக்கும் தென்மேற்கு பருவமழையில் ஏற்படும் இயற்கை பேரிடரில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பாக கந்தர்வகோட்டை செட்டி சத்திர குளத்தில் மீட்பு ஒத்திகை விழிப்புணர்வு மேற்கொண்டனர். இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.