புகையிலை விற்ற மூதாட்டி மீது வழக்குபதிவு!

1540பார்த்தது
புதுக்கோட்டை, கீரனூர் அருகே உள்ள மேல புதுவயல் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்கப்படுவதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து காவலர்கள் நேற்று (பிப். 19) அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கடையில் வைத்து அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த ஹம்சாபீவி (60) என்பவரிடம் இருந்து 2 கிலோ புகையிலை பறிமுதல் செய்த காவலர்கள் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி