இங்கிலாந்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் நடாலி அரோயோ (33). இவர் சமூகவலைதளம் மூலம் 15 வயது சிறுவனிடம் நட்பாகி அவனுக்கு தன்னுடைய நிர்வாண புகைப்படங்கள், வீடியோவை அனுப்பி உடலுறவுக்கு வற்புறுத்தியுள்ளார். இதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்து போலீஸில் புகார் கொடுத்தான். அதன்பேரில் கைது செய்யப்பட்ட நடாலிக்கு நீதிமன்றம் மிக அண்மையில் மூன்று ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதித்தது.