குஜராத்: கார் விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று டிச.09 காலை பந்துரி கிராமம் அருகே ஜுனாகத்-வெராவல் நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டன. இக்கோர விபத்தில் தேர்வுக்குச் சென்று கொண்டிருந்த 5 மாணவர்கள் உட்பட 7 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழந்த மாணவர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.