புதுக்கோட்டை: வாழ்க்கையில் வெறுப்பு - ஒருவர் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் கரூர், சிறுகோட்டையூரை சேர்ந்த காளிமுத்து, வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். கடந்த 24 ஆம் தேதி மாலை 6:30 மணியளவில் காளிகோவில் அருகே பூச்சிக் கொல்லி மருந்தை அருந்தி மயங்கி கிடந்துள்ளார். பின்னர் அவரை மீட்ட உறவினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் நேற்று அவர் இறந்து போனார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.