புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி திருவரங்குளத்தை சேர்ந்தவர் சிவராஜா. இவர் கடந்த 25ஆம் தேதி மாலை 7 மணிக்கு கரம்பக்குடியை சேர்ந்த சஞ்சீவிகுமார் என்பவரது வாடகை காரில் ஆலங்குடி சென்று கொண்டிருந்தார். அப்போது ஆயிப்பட்டி கிளைச் சாலையில் வாகனம் செல்லும் போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் காயமடைந்த சிவராஜா ஆலங்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.