கடலில் தவறி விழுந்து மீனவர் பலி!

65பார்த்தது
கடலில் தவறி விழுந்து மீனவர் பலி!
மணமேல்குடி கோட்டைப்பட்டினத்தில் இருந்து
ஜான்சன்(47), குவாட்டோ(45), முருகானந்தம் (55), சுப்பிரமணி (47) ஆகிய 4 மீனவர்கள் ஒரே படகில் நேற்று. முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, முருகானந்தம் திடீரென தவறி கடலில் விழுந்தார். தண்ணீரில் தத்தளித்த அவரை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீனவர்கள் அளித்த தகவலின்பேரில் மீனவர் சங்கத்தினர் ஆம்புலன்சுடன் கடற்கரையில் காத்திருந்தனர். மீனவர் முருகானந்தனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் மீனவர்கள் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி