மத்திய அரசை கண்டித்து திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
புதுக்கோட்டை திலகர் திடலில் மாவட்ட திமுக செயலாளர் செல்ல பாண்டியன் தலைமையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் வஞ்சித்த மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏ முத்துராஜா நகரச் செயலாளர் செந்தில் மாவட்ட பொருளாளர் லியாகத்அலி மேயர் திலகவதி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜேஸ்வரி மாவட்ட இளைஞரணி செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முன்னாள் அமைச்சர் பழனி மாணிக்கம் பேசியதாவது
இந்திய மக்கள் தொகையில்
19 கோடி பேர் இரவு பட்டினியோடு படுக்கின்றனர்
தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கின்ற மத்திய அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
தமிழகத்தை பிரதமர் மோடி தலைமுழுகி விட்டார்
திருச்சியில் பிறந்த மத்திய நிதியமைச்சர் தமிழகத்திற்கு போதுமான நிதியை தந்து நீதியை நிலைநாட்ட வேண்டும்
இனியாவது தான் செய்துள்ள தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்

தொடர்புடைய செய்தி