திருநள்ளாருக்கு சிறப்பு பஸ் அறந்தாங்கி மக்கள் கோரிக்கை!

544பார்த்தது
திருநள்ளாருக்கு சிறப்பு பஸ் அறந்தாங்கி மக்கள் கோரிக்கை!
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற பழமையான தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் தனிச்சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். அதேபோல் அறந்தாங்கி பகுதியில் இருந்து சனிக்கிழமைதோறும் நுாற்றுக்கும் அதிகமான பக்தர்கள் திருநள்ளாறு சென்று வருகின்றனர். இவர்கள் அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை, தஞ்சை, கும்பகோணம் வழியாக திருநள்ளாறுக்கு 2 முதல் 3 பஸ்கள் வரை மாறி செல்கின்றனர். இதனால் நேரம் விரையமாவதுடன், கூடுதல் செலவும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வெள்ளிக்கிழமைதோறும் இரவு நேரத்தில் அறந்தாங்கியில் இருந்து திருநள்ளாருக்கு சிறப்பு பஸ் இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி