அறந்தாங்கி: நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

1524பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் கொதரத் முகமது மகன் அபூபக்கர் (18). புதுக்கோட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை நண்பர் அப்துல் பாசித், ஜாசிக் முகமது, மூபீஸ், சபிக் ஆகியோருடன் சேர்ந்து கோங்குடி வெள்ளாற்றில் குளிக்கச் சென்றார் அப்போது, நீச்சல் தெரியாததால் அபுபக்கர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி