புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு!

62பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கொத்தமங்கலம் கிராமத்தில், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ. 1. 25 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள, தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தினை மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் , சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மு. அருணா தலைமையில் இன்று (28. 07. 2024) திறந்து வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்கள். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி. பா. ஐஸ்வர்யா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) (அறந்தாங்கி) மரு. நமச்சிவாயம், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி