கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு!

1542பார்த்தது
கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு!
கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் சமீபகாலமாக கோவில் உண்டியல்கள் உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. அதேபோல கடந்த மாதம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் உண்டியல் உடைத்து திருடியவர்களின் முகம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து உடனே அவர்களை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சேந்தன்குடி கிராமத்தில் உள்ள வாழவந்தபிள்ளையார் கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உண்டியல் உடைந்து கிடப்பதை பார்த்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த னர். அதன்பேரில் போலீசார் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வரு கின்றனர்.

இதேபோல் வடகாடு தெற்குப்பட்டிகாட்டு அய்யனார் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வடகாடு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி