ஆண்டுதோறும் மாசி மகத்தை முன்னிட்டு புதுச்சேரிக்கு வருகை புரியும் திண்டிவனம் நலிய கோடான் நகர் அருள்மிகு ஸ்ரீ அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீனிவாச பெருமாள் புதுச்சேரி கடல் தீர்த்தவாரியில் கலந்து கொள்வார்.
அவருக்கு கடல் மாசி மக தீர்த்தவாரி கமிட்டி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு திருக்கல்யாண வைபோகம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஸ்ரீ அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடத்த மாசி மக கடல் தீர்த்தவாரி கமிட்டி முடிவு செய்துள்ளது.
வருகின்ற 13-ம் தேதி மாலை ஐந்து முப்பது மணிக்கு புதுச்சேரிக்கு வருகை புரியும் ஸ்ரீ அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாளுக்கு 100 அடி ரோடு சிருங்கேரி மடம் ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவிலில் வரவேற்பு அளிக்கப்படும் என்றும், 14 ஆம் தேதி மாசி மக கடல் தீர்த்தவாரியில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்திற்கு வந்தடையும் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. மறுநாள் 15 ஆம் தேதி ஸ்ரீ அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும் குழந்தை பாக்கியங்கள் கிடைக்கும் குடும்பத்தில் சந்தோஷங்கள் நிலைக்கும் கடன் தொல்லைகள் நீங்கும். எனவே அனைவரும் பயனடைய வேண்டுகோள்