குஜராத்: ராஜ்கோட் மாவட்டம் ஜஸ்தான் பகுதியை சேர்ந்தவர் ராம் போரிச்சா (76) தனது மகன் ஜெய்தீப் (52) உடன் வசித்து வருகிறார். ராம் போரிச்சாவின் மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதை தனது மகனிடம் கூறியபோது, ஜெய்தீப் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ராம் போரிச்சா, தனது மகன் ஜெய்தீப்பை சுட்டுக் கொன்றுள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர் விசாரணையின் போது, தனது மகனைக் கொன்றதற்கு வருத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.