புதுச்சேரி இலாசுப்பேட்டை சட்டமன்ற தொகுதியில்
ஶ்ரீ சப்தகிரி அறக்கட்டளை சார்பாக நீரிழிவு நோய்க்கான ( DIABETEIC )
இலவச மருத்துவ முகாம் இன்று(18-02-25) உழவர்சந்தை நேதாஜி சிலை அருகே நடை பெற்றது.
இச்சேவையை முன்னாள் சபாநாயகர் சப்தகிரி VP சிவக்கொழுந்து தலைமையில்
ஶ்ரீ சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர்
சப்தகிரி VPS ரமேஷ்குமார் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்கள் திரளாக வந்து தங்களை பரிசோதித்துக்கொண்டு மருத்துவர்களின் அறிவுரையும் ஆலோசனையும் பெற்றனர்.
இம்முகாமின் ஏற்பாடுகளை லயன்ஸ் கிளப் ஆப் பாண்டிச்சேரி சென்ட்ரல் உறுப்பினர்களும்,
MVR மருத்துவமனை மருத்துவர்களும்
மற்றும்
ஶ்ரீ சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகளும் செய்திருந்தனர். தொடர்ந்து மருத்துவ முகாமில் பங்கேற்ற மருத்துவர்களுக்கு முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து பொன்னாடை போற்றி நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்