விஷவாயு தாக்கி தாய் மகள் பலி; முதலமைச்சர் நிவராணம்

1068பார்த்தது
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் விஷ வாய்வு தாக்கி மூன்று பெண்கள் உயிரிழந்தனர். இரண்டு பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த ரெட்டியார் பாளையம் புதுநகர் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் ரங்கசாமி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.

மேலும் முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்த சமூக அமைப்பினர் இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தினர். இந்த நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ரங்கசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், விஷவாயுத்தாக்கி இறந்த 11 வகுப்பு மாணவியின் செல்வராணி குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணமும், இதே விபத்தில் இறந்த செந்தாமரை (80), காமாட்சி (45) ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

விபத்து குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தவறு நடந்திருந்தால் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று குறிப்பிட்ட அவர் இனிவரும் காலங்களில் இது போன்ற விபத்துக்கள் நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி