ஆந்திராவின் தலைநகர் இதுதான்... அதிரடியை தொடங்கும் சந்திரபாபு நாயுடு

76பார்த்தது
ஆந்திராவின் தலைநகர் இதுதான்... அதிரடியை தொடங்கும் சந்திரபாபு நாயுடு
ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வென்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். நாளை (ஜூன் 12) நான்காவது முறையாக அவர் ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ளார்.

செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு பேசும்போது, “ஆந்திராவின் ஒரே தலைநகராக அமராவதி தான் இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம். பழிவாங்கும் அரசியலை செய்யப்போவதில்லை. மூன்று தலைநகர், நான்கு தலைநகர் என வஞ்சக செயல்களால் மக்களோடு விளையாட மாட்டோம். அதேநேரம், விசாகப்பட்டினம் மாநிலத்தின் வர்த்தக தலைநகராக இருக்கும்.” என்றார்.

தொடர்புடைய செய்தி