வாக்காளர், நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த அதிமுக செயலாளர்

570பார்த்தது
வாக்காளர், நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த அதிமுக செயலாளர்
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நடைபெற்ற புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கும் அஇஅதிமுக சார்பில் நன்றிகள்.

கழக வேட்பாளராக G. தமிழ்வேந்தன் அவர்களை போட்டியிட அனுமதித்த மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். கழக வேட்பாளர் வெற்றிக்காக இரவும், பகலும், கடும் வெயிலிலும் தேர்தல் பணியாற்றிய மாநில கழக நிர்வாகிகளுக்கும், மாநில பிற அணி நிர்வாகிகளுக்கும், தொகுதி கழக செயலாளர்கள் மற்றும் தொகுதி கழக பொருப்பாளர்களுக்கும், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், வார்டு கழக பொருப்பாளர்களுக்கும், காரைக்கால் மாவட்ட கழக அத்தனை பொருப்பாளர்களுக்கும், ஏனாம், மாஹே பிராந்தியத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுக்கும், கழக கூட்டணி கட்சிகளை சேர்ந்த அத்தனை நண்பர்களுக்கும், குறிப்பாக கழகத்தின் அடிமட்ட தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புதுச்சேரி அதிமுக சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகலந்த வணக்கங்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி