புதுச்சேரியில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம்

60பார்த்தது
உயர்த்தப்பட்டுள்ள சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக மத்திய பாஜக அரசை கண்டித்தும், புதுச்சேரியில் ஆளும் என். ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் வில்லியனூர் ராஜீவ்காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு உள்பட நூற்றுக்கணக்கான காங்கிரஸ்காரர் கலந்துகொண்டு விலைவாசி உயர்வுக்கு காரணமாக மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது சிலிண்டருக்கு மாலை அணிவித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி