காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் இன்று 10-வது பட்டமளிப்பு விழா கி. ரா கலையரங்கில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 243 இளங்கலை மாணவர்கள், 21 முதுகலை மாணவர்கள், 16 பி. எச். டி மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். இந்த விழாவில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.