காரைக்காலில் தேர்தல் துறையின் சார்பாக பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் செய்முறை விளக்கம் செய்து காண்பித்தார்கள். இதன் ஒரு பகுதியாக காரைக்கால் அரசு செவிலியர் பயிற்சி கல்லூரியில் மாணவிகளிடம் வாக்களிப்பது குறித்தும் இளம் வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கி கூறினார்கள்.