காரைக்கால் மாவட்டத்தில் செப்டம்பர் 27 - ஆம் தேதியன்று நடைபெறும் உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து 27. 90. 24 முதல் 29. 19. 24 வரை மூன்று நாட்கள் விழாவை சிறப்பாக நடத்த மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று(செப்.12) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் பொதுமக்களை கவரும் வண்ணம் சுற்றுலா தளங்களை தூய்மைப்படுத்துதல், கபடி போட்டி, வாலிபால் போட்டி, படகு போட்டி, மினி மாரத்தான் போட்டி, இன்னிசை கச்சேரி, புகைப்பட கண்காட்சி, ஹேப்பி ஸ்ட்ரீட் ஷோ உள்ளிட்ட போட்டிகள் நடத்த ஆலோசிக்கப்பட்டன.