புதுச்சேரி சிறுமி படுகொலை - டிடிவி தினகரன் கண்டனம்

82பார்த்தது
புதுச்சேரி சிறுமி படுகொலை - டிடிவி தினகரன் கண்டனம்
புதுச்சேரி சிறுமியின் படுகொலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பதிவில், புதுச்சேரி மாநிலம் முழுவதுமே கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதன் விளைவே இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் அரங்கேறுவதற்கு காரணம். எனவே, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதோடு, சிறுமியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் புதுச்சேரி மாநில அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி