தமிழக அரசின் தென்னை சாகுபடி மேலாண்மை கையேடு வெளியீடு!

70பார்த்தது
தமிழக அரசின் தென்னை சாகுபடி மேலாண்மை கையேடு வெளியீடு!
தமிழக அரசின் தென்னை சாகுபடி மேலாண்மை கையேட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (ஜுன் 7) வெளியிட்டார். தென்னை சாகுபடி, உற்பத்தி, மதிப்புக்கூட்டு பொருள் உற்பத்தி உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையிலான குழு தயாரித்துள்ளது. தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளை பாதுகாக்கும் பொருட்டு தயாரிக்கப்பட்ட இந்த கையெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி