நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நாளை போராட்டம்

56பார்த்தது
நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நாளை போராட்டம்
மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நாளை போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள மோடி அரசு இந்த பட்ஜெட்டை அறிவித்துள்ளது என இந்தியா கூட்டணி கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதையடுத்து, டெல்லியில் உள்ள கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி