அரசுத் துறைகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 51,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்., 29) வழங்கினார். டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நடந்த நிகழ்ச்சியில், புதிய பணியாளர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதில் பேசிய அவர், இந்தியாவில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கும் செயல்முறை தொடர்கிறது. நமது அரசு லஞ்ச லாவண்யம் இன்றி வேலைகளை வழங்குவதால் தனித்து நிற்கிறது என்றார்.