காலையில் வெறும் வயிற்றில் காபி குடித்தால் வரும் பிரச்சனைகள்

556பார்த்தது
காலையில் வெறும் வயிற்றில் காபி குடித்தால் வரும் பிரச்சனைகள்
காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் அதனால் உருவாகும் அமிலங்கள் வயிற்றுப்பகுதியை பாதிப்பதாக கூறப்படுகிறது. சிலருக்கு வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் ஜீரண கோளாறுகள், குடல் அழற்சி நோய்கள், நெஞ்செரிச்சல், குமட்டல் உள்ளிட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. ஆனால், எந்த ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்படவில்லை. அப்படி வெறும் வயிற்றில் காபி குடிப்பது உங்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிந்தால், உணவுகளுக்கு பிறகு குடித்து சோதித்து பார்க்கலாம்.

தொடர்புடைய செய்தி