"யாரும் அழ வேண்டாம்".. TTF வாசன் ஆறுதல்

65பார்த்தது
"யாரும் அழ வேண்டாம்".. TTF வாசன் ஆறுதல்
சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக டி.டி.எஃப் வாசன் மீது 7- பிரிவின் கீழ், மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும் மதுரை அண்ணா நகர் காவல் கையெழுத்திட உத்தரவிட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று (ஜூன் 1) வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்திற்கு டி.டி.எஃப் வாசன் கையெழுத்திட வந்தார். அப்போது காவல் நிலையத்திற்கு முன்பு கண்ணீர் விட்டு அலுத்து வீடியோ வெளியிட்ட தனது ரசிகர்களை சந்தித்தார். பின்னர் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு "யாரும் அழ வேண்டாம், நான் இருக்கிறேன்" என ஆறுதல் கூறிச்சென்றார்.

தொடர்புடைய செய்தி