நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். 14வது சுற்றில் இருவரும் 8.5 என்ற சம புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் டை பிரேக்கர் நடத்தப்பட்டது. டை பிரேக்கர் சுற்றில் மிக திறமையாக விளையாடிய பிரக்ஞானந்தா, குகேஷை வீழ்த்தினார். விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இத்தொடரை வென்ற நபர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார்.