வறுமையை ஒரேயடியாக ஒழித்துவிட முடியும் - ராகுலின் உத்தரவாதம்

78பார்த்தது
வறுமையை ஒரேயடியாக ஒழித்துவிட முடியும் - ராகுலின் உத்தரவாதம்
வறுமையை ஒரேயடியாக ஒழித்துவிட முடியுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், 'வறுமையை ஒரேயடியாக ஒழித்துக்கட்டப்பட வேண்டும்' என்ற இலக்கை அடைவதற்கான தீவிர நடவடிக்கைகளை நிச்சயமாக எடுக்கும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வந்து சேருவது உறுதி. இதை காங்கிரஸ் உறுதிசெய்யும் என பேசினார். முன்னதாக, பிரதமர் மோடி, 'வறுமையை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட முடியும்' என்று கூறிய ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி