பர்த்டே ட்ரீட் கொடுத்த அஜித் - ரீ ரிலீஸாகும் மங்காத்தா

66பார்த்தது
பர்த்டே ட்ரீட் கொடுத்த அஜித் - ரீ ரிலீஸாகும் மங்காத்தா
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியான சூப்பர் ஹிட் படம் ‘மங்காத்தா’. அஜித்தின் 50ஆவது படமான ‘மங்காத்தா’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்த படத்திற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் பிஜிஎம், அதனை சிறப்பாக செய்திருப்பார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்நிலையில், வருகிற அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி ‘மங்காத்தா’ படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.