முடிவுக்கு வரும் பிரபல சீரியல்.. ரசிகர்கள் அதிர்ச்சி

101197பார்த்தது
முடிவுக்கு வரும் பிரபல சீரியல்.. ரசிகர்கள் அதிர்ச்சி
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு தமிழகத்தில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இல்லத்தரசிகளின் பேவரைட்டாக பல தொடர்கள் உள்ளன. இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பிரியமான தோழி" சீரியல் விரைவில் முடிவுக்கு வருவதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது. தற்போது 500 எபிசோடுகளுக்கும் மேல் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் இது முடிந்தால் அடுத்து எந்த புதிய சீரியல் வரப்போகிறது என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி